For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நைஜீரியாவில் வான்வழி தாக்குதல் நடத்திய ராணுவம் - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு!

நைஜீரியாவில் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
10:42 AM Aug 24, 2025 IST | Web Editor
நைஜீரியாவில் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவில் வான்வழி தாக்குதல் நடத்திய ராணுவம்   35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
Advertisement

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த நைஜீரிய அதிபர் போலா தினுபு தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

Advertisement

இருப்பினும், நைஜீரியஅரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகவே இதுவரை 35 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து சென்றதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், நாட்டின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் போகோஹரம் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு அந்த நாட்டின் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது கேமரூன் நாட்டுக்கு அருகே கும்ஷே பகுதியில் 4 இடங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக நைஜீரிய விமான படையின் செய்தி தொடர்பாளர் எஹிமென் எஜோடேம் தெரிவித்துள்ளார்.

மேலும் நைஜீரிய அதிபர் போலா தினுபு தலைமையிலான அரசு, பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டாலும், தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement