மிக்ஜம் புயல் தீவிரம்: சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை...!
மிக்ஜம் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் சென்னை அருகே வரும் மிக்ஜம் புயல் கரைக்கு இணையாக வடக்கு நோக்கி நகரும் எனவும், நாளை நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே 150 கிலோ மீட்டர் முதல் 175 கிலோ மீட்டர் வரை மிக்ஜம் புயல் வீச வாய்ப்பு உள்ளதாகவும், வட தமிழகத்தை நோக்கி 14 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்கிறது எனவும் எக்ஸ் தளத்தில் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னை வளரசவாக்கத்தில் 17.1 சென்டி மீட்டரும், காட்டுப்பாக்கத்தில் 14.5 சென்டி மீட்டரும் அளவும் மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.