மிக்ஜாம் புயல் எதிரொலி - இன்றும் 6 ரயில்கள் ரத்து...
06:48 PM Dec 05, 2023 IST
|
Web Editor
Advertisement
மிக்ஜாம் புயல் காரணமாக (டிசம்பர் 5) இன்றும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து நேற்று சென்னைக்கு இயக்கப்பட இருந்த ரயில்களும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட இருந்த ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் (டிசம்பர் 5) இன்றும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்: சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!
டிசம்பர் 5 (இன்று) ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
- தாம்பரம்-செங்கோட்டை (20683) இடையே இயக்கப்படும் ரயில்,
- தாம்பரம் - நாகர்கோவில் (20691) இடையே இயக்கப்படும் ரயில்,
- காரைக்குடி - சென்னை எழும்பூர் (12606) இடையே இயக்கப்படும் ரயில்,
- சென்னை எழும்பூர் - மதுரை (12635) இடையே இயக்கப்படும் ரயில்,
- சென்னை எழும்பூர் -காரைக்குடி (12605) இடையே இயக்கப்படும் ரயில்,
- மதுரை - சென்னை எழும்பூர் (12636) இடையே இயக்கப்படும் ரயில்,
ஆகிய 6 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
Next Article