Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

 மிக்ஜாம் புயல் எதிரொலி - வேகமாக நிரம்பி வரும் முக்கிய நீர்த்தேக்கங்கள்!

06:06 PM Dec 04, 2023 IST | Web Editor
Advertisement

தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது.  இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதன்படி, புழல் நீர் தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3300 கன அடியில் தற்போது  2,910 கன அடி நீர் உள்ளது.  அதன் மொத்த உயரம் 21.20 அடியில் தற்போது 19.49 அடி உயரம் நீர் உள்ளது.  தொடர்ந்து வினாடிக்கு 5,777 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.  வினாடிக்கு 2,189 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  90கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்.!

சோழவரம் நீர் தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில் தற்போது 881 மில்லியன் கன அடி அடி நீர் உள்ளது.  அதன் மொத்த உயரம் 18.86 அடியில் தற்போது 17.86 அடி உயரம் நீர் இருப்பு உள்ளது.  வினாடிக்கு நீர்வரத்து 456 கன அடி வந்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் வினாடிக்கு 2,562 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி நீர்த்தேக்கத்தின்  மொத்த கொள்ளளவு 3,231 மிலியன் கன அடியாக உள்ள நிலையில் தற்போது 2,580 மில்லியன் கன அடி நீர் உள்ளது.  அதன் மொத்த உயரம் 35 அடியில் தற்போது 33.2 கன அடி நீர் இருப்பு உள்ளது.  வினாடிக்கு நீர்வரத்து 3,950 கன அடி வந்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

கன மழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளதால், நீர் தேக்ககங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

Tags :
ChennaiCycloneCyclone MichaungMichaungnews7 tamilNews7 Tamil UpdatesPoondi lakePuzhal Lake
Advertisement
Next Article