மிக்ஜாம் புயல் எதிரொலி | வடதமிழகத்தில் வெளுத்தெடுக்கும் கனமழை...!
மிக்ஜாம் புயல் எதிரொலியாக வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மிக்ஜாம் புயல் எதிரொலியாக பீர்க்கங்கரணை ஏரி நிரம்பியதால் தாம்பரம் 61வது வார்டு பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்படும் அப்பகுதி மக்கள், கழிவுநீருடன் மழை நீரும் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மீனவ கிராம மக்கள் மறுத்த நிலையில், பொன்னேரி வருவாய் துறையினர் அவர்களிடம் சமரசம் செய்து அவர்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேபோல்,சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை ஐடி நிறுவனம் அருகே பழமைவாய்ந்த மரம் முறிந்து விழுந்தது. இதையடுத்து, பேரிடர் மீட்பு, தீயணைப்பு வீரர்கள் கொட்டும் மழையிலும், சாலையின் குறுக்கே கிடந்த மரக்கிளையை இயந்திரத்தை கொண்டு அகற்றினர்.