Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மிக்ஜாம் புயல் - தூத்துக்குடியில் சுமார் 4000 படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!

12:37 PM Dec 04, 2023 IST | Web Editor
Advertisement

வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுமார் 4000 படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Advertisement

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் இன்று ஆந்திர மாநிலம் நெல்லூர் மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்கிறது.  இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:  சென்னை | கனமழை காரணமாக தரையில் இறங்கி அடுக்குமாடி கட்டடம்!

மேலும் ஆழ் கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், இல்லையென்றால் உடனடியாக கரை திரும்பவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை
வரையிலான மீனவ கிராமங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்
3000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பைபர் படகுகள் என சுமார் 4000 படகுகள்
கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Tags :
andra pradeshCycloneCyclone MichaungFishermenIndianews7 tamilNews7 Tamil Updatestamil naduThoothukudi
Advertisement
Next Article