Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மிக்ஜாம் புயல் தீவிரம் | பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் -அரசு அறிவுறுத்தல்!

09:03 AM Dec 04, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என, இந்திய வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையமும் அறிவுறுத்தியுள்ளன.

Advertisement

இதுதொடர்பாக வெளியிlடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு சென்றுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை தண்ணீர் புகாதவாறு பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், பால் மற்றும் மருந்துகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், பேட்டரி, band aid, உலர்பழங்கள், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  பலத்த காற்று காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் மேற்கூரைகள் பறந்து விழுந்து, விபத்து ஏற்படக்கூடும் என்பதால், மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கதவு, ஜன்னல்களை மூடி வைக்கவும், ஆபத்தா இடங்களிலும் நீர்நிலை அருகிலும் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் அருகே நிற்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு மாநில அவசரக்கால செயல்பாட்டு மைய எண் -1070, வாட்ஸ் அப் எண் 94458 69848, மாவட்ட அவசரக்கால செயல்பாட்டு மைய எண் -1077 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Next Article