Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறும் மிக்ஜாம்! -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

10:30 AM Dec 04, 2023 IST | Web Editor
Advertisement

 வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் இன்று முற்பகலுக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்  வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3) நேற்று புயலாக வலுவடைந்து. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் (டிச.3) நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வளசரவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று முற்பகலில் தீவிரப் புயலாக மிக்ஜம் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இரவு வரை காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Next Article