ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
புயல் டிசம்பர் 03 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி காலை 8:30 மணி வரை ஆந்திரா மாநிலம் திருப்பதி, சித்தூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜம் புயலாக வலுவடைந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, வரும் 4-ம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (டிச.03) முதல் நாளை (டிச.04) காலை வரை திருப்பதி, சித்தூர், நெல்லூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் இடி, மின்னல் ஆகியவற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : புயல் எதிரொலி – மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரம் மாற்றம்!
மேலும் டிசம்பர் 4ஆம் தேதி காலை முதல் டிசம்பர் 5ஆம் தேதி காலை வரை ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான கடப்பா, அன்னம்மையா, திருப்பதி, சித்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆந்திர மாநில அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களாவது:
ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான கடப்பா, அன்னம்மையா, திருப்பதி, சித்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.
மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு அமைத்துள்ள முகாம்களுக்கு செல்ல வேண்டும். 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள காரணத்தால் அரசு ஊழியர்கள் எப்போதும் தயார் நிலையில்
இருக்க வேண்டும். மேலும், தேவையான அளவில் மீட்பு குழுவினரை தயார் நிலையில்
வைக்க வேண்டும்.
புயல் பாதிப்புகளை எதிர் கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.