MI vs DC | பவுலர்களுக்கு தண்ணி காட்டிய சூர்யகுமார் யாதவ்.. டெல்லிக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!
ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் இன்று நடைபெற்று வரும் 63 லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.
இதையும் படியுங்கள் : ரயில்வே பாலம் அருகே கிடந்த சூட்கேஸ்… திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… தொடரும் மர்மம்!
இதில் ரோகித் சர்மா 5 ரன்களிலும், ரியான் ரிக்கெல்டன் 25 ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து களம் கண்ட வில் ஜேக்ஸ் 21 ரன்களிலும், திலக் வர்மா 27 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன் எடுத்தார். டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆடி வருகிறது.