For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் அதிமுகவில் இருந்து விலகல்!

அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
09:50 PM Apr 10, 2025 IST | Web Editor
எம் ஜி ஆர்  இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் அதிமுகவில் இருந்து விலகல்
Advertisement

அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் அறிவித்துள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளரும், எஸ்.பி.வேலுமணியின் வலது கரமாகவும், நெருங்கிய தொடர்பில் இருந்தவர். தற்போது தனது தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு வந்தேன். கடந்த 20 ஆண்டு காலம் அதிமுகவில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன். கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்திருக்கிறேன். அதிமுக கட்சி பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்ப்பு இன்றி பணியாற்றி இருக்கிறேன். மக்களுக்கான சேவை பணிகளிலும் மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறேன்.

கட்சிக்காக நான் செய்த பணிகள் அனைவரும் அறிந்ததே. தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. எனவே கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்து கொள்கிறேன். கட்சியிலிருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன், கனத்த இதயத்துடன் எடுத்திருக்கிறேன்.

கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர், அனைத்திந்திய அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பணிபுரிந்த கழகத்தின் நிர்வாகிகள், மூத்தவர்கள் மற்றும் கோவையில் எனது தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement