"திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - நடிகர் ராமராஜன் கோரிக்கை!
'சாமானியன்' திரைப்படத்தின் 35 வது நிறைவு விழாவில் பங்கேற்ற நடிகர் ராமராஜன், திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள SSS திரையரங்குக்கு நேற்று மக்கள் நாயகன் நடித்த சாமானியன் திரைப்படத்தின் 35 வது நிறைவு விழாவை முன்னிட்டு ரசிகர்களை சந்திப்பதற்காக மக்கள் நாயகன் ராமராஜன் வருகை தந்தார்.
அப்போது ராமராஜனுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் உற்சாக வரைவேற்பு அளித்தனர். மேலும், அங்கு வந்த குழந்தைகளிடம் செல்பி எடுத்து ராமராஜன் மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டவர்கள் உயரிழந்துள்ள நிலையில், ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
நான் திரையரங்கில் வேலை பார்த்து உள்ளேன். அப்போது தினமும் 3, 4 காட்சிகளை பார்ப்பேன். அனைத்து நடிகர்கள் நடித்த படங்களையும் பார்த்து இருக்கிறேன். ஆனால் என்னைக் கவர்ந்தவர் எம்ஜிஆர் மட்டும் தான். எம்ஜிஆரை தான் நான் முன் உதாரணமாக எடுத்து படத்தில் நடித்து இருக்கிறேன். மேலும், எத்தனை கோடி கொடுத்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்காத காட்சிகள் நடித்தது இல்லை.
இதையும் படியுங்கள் : டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று: இந்தியா – ஆஸ்திரேலியா இன்று பலபரீட்சை!
மக்களையும் என்னையும் எப்பொழுதும் பிரிக்க முடியாது. டிக்கெட் விலை அதிகமாக
இருக்கிறது. இதனால், தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் டிக்கெட் விலையை குறைக்க வேண்டும். திரையரங்கில் முதல் ரோலில் இருப்பவருக்கு ரூ. 50 டிக்கெட் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.