Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,495 கன அடியாக உயர்வு!

10:54 AM Oct 17, 2024 IST | Web Editor
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை வினாடிக்கு 16,196 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, இன்று காலை வினாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 92 அடியிலிருந்து 93.35 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 56.56 டி.எம்.சி ஆக உள்ளது.

Tags :
Heavy rainIncreaseMettur damwater level
Advertisement
Next Article