மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு | 250 கன அடி நீர் வெளியேற்றம்!
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4 ஆயிரத்து 107 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக 250 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
அத்துடன் தமிழ்நாட்டு மட்டும் அதன் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணை நீர்வரத்து 4107 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (நவ. 23) காலை 63.45அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3864கன அடியிலிருந்து வினாடிக்கு 4107கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 27:32 டிஎம்சியாக உள்ளது.