உதகை #MountainTrainService ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரத்து!
மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை வரும் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியிலிருந்து – மேட்டுப்பாளையம் வரை மலைரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை பாதையின் இருபுறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள், வனவிலங்குகளும் தென்படுவதால் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில், மழைகாலங்களில் மலைகளிலுருந்து மண்சரிவது, கனமழையால் மரங்கள் விழுவது என தண்டாவளங்கள் சேதமடைகின்றன. இதனால் அவ்வப்போது ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் : “90% இந்திய மக்களுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – #Rahulgandhi மீண்டும் வலியுறுத்தல்!
அந்த வகையில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் மண்சரிவு காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கும், உதகையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கும் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.