சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு... #Ooty மலை ரயில் சேவை நவ.5ம் தேதி வரை ரத்து!
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை வரும் 5ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியிலிருந்து – மேட்டுப்பாளையம் வரை மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை பாதையின் இருபுறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள், வனவிலங்குகளும் தென்படுவதால் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து, தண்டவாளம் சேதம் அடைந்துள்ளதால் அதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் சிறப்பு அபிசேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!
மேலும் தொடர்ந்து மலை ரயில் பாதையை அமைந்துள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 5ம் தேதி வரை மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது