மெட்ரோ பணி - சென்னை மாதவரம் எம்.எம் காலனியை 4 மாதத்திற்குள் காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னையில் பால் சப்ளை செய்வதற்காக மாதவரம் பால் பண்ணைக்கு அருகில், கடந்த 1959ம் ஆண்டில் மாட்டுக் கொட்டகை அமைக்க அரசு நிலம் ஒதுக்கீடு செய்தது. அந்த நிலத்தில் அருகிலேயே மாடு வளர்ப்போர் தங்கி கொள்வதற்காக மாதவரத்தில் எம்எம் காலனியும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக எம்.எம் காலனி குடியிருப்பு வாசிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி நிலத்தை காலி செய்து கொடுக்க அரசு உத்தரவிட்டது. இதனிடையே நிலத்தை காலி செய்து பிறப்பித்த அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி அப்பகுதியை சேர்ந்த லட்சுமி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, பால் பதப்படுத்தும் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்து விட்டதாலும், அதற்கு போக்குவரத்தும் வளர்ச்சி கண்டிருப்பதாலும், மேலும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு பின் நிலத்தை காலி செய்ய மறுப்பதை ஏற்க முடியாது.
வரும் மே 31ம் தேதிக்குள் சென்னை எம் எம் காலனி, நிலத்தை காலி செய்து கொடுக்க உத்தரவிட்ட நீதிபதி, நிலத்தை காலி செய்ய மறுத்தால் அரசு காலி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தார்.