Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெங்களூரு - ஓசூர் #Metro-வுக்கு முட்டுக்கட்டை போடும் வாட்டாள் நகராஜ்! தமிழ்நாடு வாகனங்களை மறித்து திடீர் போராட்டம்!

03:46 PM Aug 31, 2024 IST | Web Editor
Advertisement

பெங்களூருவிலிருந்து ஒசூர் வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. இதற்கிடையில் ஒரு பணிமனையும், 12 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இந்த மெட்ரோ வழித்தடத்தை நீட்டிக்க கூடாது என கன்னட சாலுவாலி வாடல் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்டாள் நாகராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர், ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது “ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும். ஓசூர் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகள் கர்நாடகா மாநிலத்திற்குள்ளாக அமைய வேண்டிய பகுதிகள். காமராஜர் ஆட்சியில் தான் தமிழ்நாட்டிற்குள் இணைக்கப்பட்டன. கட்டாயமாக ஓசூரை, கர்நாடகா மாநிலத்திற்குள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். கர்நாடகாவுடன் ஓசூரை இணைத்த பிறகே, மெட்ரோ நீட்டிக்க அனுமதிப்போம் என தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா மாநிலம் நோக்கி வரக்கூடிய வாகனங்களை தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாட்டாள் நாகராஜ் உள்பட சாலை மறியலில் ஈடுபட்ட பலரை கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

Tags :
KarnatakaMetroVatal Nagaraj
Advertisement
Next Article