Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை லைட்ஹவுஸ்-போட் கிளப் மெட்ரோ: சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கிய ‘கழுகு’ இயந்திரம்!

07:45 PM Jan 18, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 2வது சுரங்கம் தோண்டும் இயந்திரம்  ‘கழுகு’ கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப் நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.

Advertisement

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 43 கி.மீ. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், "கழுகு" என பெயரிடப்பட்ட இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் தனது பணியை தொடங்கியது. "ஃபிளமிங்கோ" என பெயரிடப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்த ஆண்டு செப். 01-ம் தேதியன்று சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வழித்தடம் 4-ல் கலங்கரை விளக்கத்தில் இருந்து (downline) போட் கிளப் நிலையம் வரை சுரங்கப்பாதை அமைத்து வருகிறது.

இந்நிலையில், "கழுகு" என பெயரிடப்பட்ட அதன் இணையான சுரங்கம் தோண்டும் இயந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து (upline) திருமயிலை நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை இன்று தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபர் 2026 இல் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் AEON நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
chennai metroCMRLconstructionMetroNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article