#Weatherupdate | தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உள் தமிழ்நாடு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : புதிய அமைச்சர்கள் நால்வருக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு! யார் யாருக்கு எந்தெந்த இலாகா? முழு விவரம் இதோ!
இந்நிலையில் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.