For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு!

06:10 PM Dec 19, 2023 IST | Web Editor
மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு   தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு
Advertisement

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகவும், தாமதமாகவும் கிடைத்தது. இதுவே முதல் நிவாரணப்பணி தொய்வுக்கு முதல் காரணம் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Advertisement

தென் மாவட்டங்களில் பெய்த கன மழை குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

”நேற்று முன்தினம் (டிச. 17) தொடங்கி நேற்று மதியம் வரை தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூர் பகுதியில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 30 மணி நேரத்தில் காயல் பட்டினம் பகுதியில் 116 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய விடுக்கப்பட்டுள்ளது. 

375 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர்கள் உதவியுடன், 160 நிவாரண முகாம்கள் தொடங்கியுள்ளோம். இதுவரை 17,000 பேரை வெள்ளத்தில் இருந்து மீட்டுள்ளோம். 34,000 பேருக்கு சாப்பாடு வழங்கி உள்ளோம். ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு மழை பாதிப்பினால் இன்னும் செல்ல முடியவில்லை. அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 30,000 பேருக்கு பால் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சீராகும் நிலை தற்போது உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்வினியோகம் சரியாக உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் மின் விநியோகத்திற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 48 மின்மாற்றி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 60% பகுதிகளில் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. அந்த பகுதிகளில் மழை நீர் இன்னும் குறையவில்லை

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நேற்று வரை மழை பெய்துள்ளது. நேற்று கூட அந்த பகுதிக்கு செல்ல முயற்சி செய்யப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் உதவியுடன் அந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை. இன்று அதிகாலை 5:45 மணிக்கு மாள ஹெலிகாப்டர் அந்த பகுதிக்கு சென்றடைந்தது. 

தேசிய மீட்பு படையினர் போதுமான அளவிற்கு உள்ளார்கள். 323 படகுகள் கூடுதலாக செயல்படுத்தி உள்ளோம். மீட்பு படையினர் பயன்படுத்தும் படகுகளுக்கு பெட்ரோல் பற்றாக்குறை எதுவும் இல்லை. தூத்துக்குடி மாவட்டங்களில் சில பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், அந்த பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் செல்ல முடியவில்லை. தற்போது 9 ஹெலிகாப்டர் உணவு வழங்கும் பணியிலும் மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளது.

வெள்ள பாதிப்பால் 10 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று உயிரிழந்துள்ளனர். அதில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நபர்கள் மூன்று பேர், இயற்கையாக ஒருவர் உயிரிழுந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 83 எருமைகள், 297 ஆடுகள், 29 கோழிகள் உயிரிழந்துள்ளன. அத்துடன் 304 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சாலை முழுவதும் சேதம் அடைந்துள்ளது. 120 மீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது. இதுபோன்ற மழை பாதிப்பு உலகின் எந்த உலகத்தில் எந்த இடங்களும் எதிர்கொள்ள முடியாது. அரசு சார்பாக நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு போய் சேர வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகவும், தாமதமாகவும் கிடைத்தது. இதுவே முதல் நிவாரணப்பணி தொய்வுக்கு முதல் காரணம்."

இவ்வாறு தலைமை செயமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement