Mark Zuckerberg -ன் கருத்து - மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா துணைத் தலைவர்!
கொரானா பெருந்தொற்றை கையாண்ட விதத்தை சுட்டிக்காட்டி இந்தியாவில் நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் பதவியேற்ற அரசாங்கம் தோல்வியுற்றதாக மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசியிருந்தார்.
அவர் பேசியதற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தவறான தகவலை கூறியதாகவும் 2024 தேர்தலில் வெற்றி பெற்றது என்பது மோடி ஆட்சியின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் பதில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய மெட்டா நிறுவனத் துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ரால் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில், “மார்க் ஜுக்கர்பெர்க்கின் கருத்து, பல நாடுகளில் உண்மையாகவே உள்ளது, ஆனால் இந்தியாவுக்கு அல்ல. இந்த கவனக்குறைவான தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மெட்டா நிறுவனத்திற்கு வியாபாரத்திற்கு இந்தியா முக்கியமான நாடாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.