"மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்"-மெட்டா நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன்!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்கள் நேற்று முடங்கிய நிலையில், "மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்" என மெட்டா நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் X தள பதிவிட்டுள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக வலைதள பக்கங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு 40 நிமிடங்களுக்கு மேலாக முடங்கின. இதனால், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பயனர்கள் அவதியடைந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் இணையதள செயலிகள் தற்காலிகமாக செயலிலந்துள்ளது. கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள செயலி செயலிழந்துள்ளது. மேலும், நேற்று இரவு சில பயனர்களின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் log out ஆகியன. இதனால் லாக்-இன் செய்ய முடியாமல் உலகெங்கிலும் பயனர்கள் அவதியடைந்துள்ளர். விரைவில் சரிசெய்யப்படும் என மெட்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்!” – அமைச்சர் ரகுபதி
இதையடுத்து, மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா தள சர்வர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பின்னடைவுதான் இதற்கு காரணம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மெட்டா தகவல் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் கூறியதாவது :
“தொழில்நுட்பச் சிக்கலால், எங்களின் சில சேவைகளை அணுகுவதில் மக்கள் சிரமப்பட்டனர். நாங்கள் விரைவாக அந்த சிக்கலைத் தீர்த்துவிட்டோம். மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்”
இவ்வாறு மெட்டா தகவல் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் தெரிவித்தார்.