டிசம்பரில் மும்பை வான்கடே மைதானம் வருகிறார் மெஸ்ஸி..!
அர்ஜென்டீன கால்பந்து அணி கேப்டனான வீரர் லியோனல் மெஸ்ஸி. உலகமெங்கும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.38 வயதான மெஸ்ஸி 388 அசிஸ்ட்ஸ், 874 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 8 பேலந்தோர், 6 ஐரோப்பியன் தங்கக் காலணிகள் மற்றும் 45 கோப்பைகளை வென்றுள்ளார். கடந்த 2022-இல் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில் இவர் தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்று அசத்தியது.
இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையின் வான்கடே திடலில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வரும் டிச.11ஆம் தேதி மெஸ்ஸி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் மெஸ்ஸி, இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து இருப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மெஸ்ஸிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அவரது இந்திய வருகை கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பாக மெஸ்ஸி 2011-இல் கொல்கத்தா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.