உதகை - தஞ்சாவூர் இடையே அரசு பேருந்து சேவை தொடங்கியது!
உதகை - தஞ்சாவூர் பகுதிக்கு இடையே புதிய அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பேருந்து சேவையை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கும் தஞ்சாவூருக்கும் இடையே புதிய அரசு பேருந்து இயக்க
வேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை
வைத்திருந்தனர். உதகையில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் பொது மக்களின் கூறினர்.
இதையடுத்து, பொது மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று உதகையிலிருந்து 370 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஞ்சாவூர் பகுதிக்கு புதிய பேருந்தை இன்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
இதையும் படியுங்கள் : சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!
அதனைத்தொடர்ந்து, இந்த பேருந்தில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 250 ரூபாய் கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற
உறுப்பினர் ஆ.ராசா பொதுமக்களிடையே பேசினார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறியதாவது;
"தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தஞ்சாவூர் வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று முதல் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் பகுதிக்கு புதிய பேருந்து இயக்கப்பட்டுள்ளது" இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில்
13 புதிய பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாகவும் தற்போது
தஞ்சாவூர் பகுதிக்கு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேருந்து இயக்கப்பட்டுள்ளது எனவும் என சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.