For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெகுவிமரிசையாக நடைபெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலய ஊஞ்சல் உற்சவ விழா! - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

10:54 AM Feb 10, 2024 IST | Web Editor
வெகுவிமரிசையாக நடைபெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலய ஊஞ்சல் உற்சவ விழா    லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Advertisement

விழுப்புரம் மாவட்டம்,  மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூடம் ஏற்றியும் பக்தி பரவசத்தில் சாமி ஆடியும் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ளது
பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலமான ஸ்ரீஅங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இந்த வருட தை மாத அமாவாசை தினத்தையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பால்,  சந்தனம் பழரசம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் அங்காளம்மன் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனையடுத்து,  உற்சவர் அங்காளம்மனுக்கு பட்டு உடுத்தப்பட்டு,  அலங்காரங்கள் செய்யப்பட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அங்காளம்மன் அருள் பாலித்தார்.  பின் நள்ளிரவு பூசாரிகள் வழக்கப்படி, உற்சவர் அங்காளம்மனை பூசாரிகள் தோளில் சுமந்து வந்து மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மேடையில் அமர வைத்து,  தாலாட்டு பாடல்கள் பாடப்பட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கையில் சூடம் ஏற்றி பக்தி பரவசத்தில் அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே.... ஓம் சக்தி..என கோஷமிட்டு சாமி ஆடி அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.  மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நடைபெறும் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் உள்ளூர்,  வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம்.  அதேபோல் இம்மாதம் தை மாத அமாவாசை என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்
கர்நாடக மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு
அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டிருந்தன.  மேலும் விழுப்புரம்  மாவட்ட எஸ்.பி தீபக் சிவாச் தலைமையில் 700-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags :
Advertisement