For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல - சீமான் பரபரப்பு பேட்டி!

உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு தோல்விக்கு பிறகும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என்று சீமான் தெரிவித்துள்ளர்.
11:43 AM May 30, 2025 IST | Web Editor
உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு தோல்விக்கு பிறகும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என்று சீமான் தெரிவித்துள்ளர்.
மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல   சீமான் பரபரப்பு பேட்டி
Advertisement

தேனி திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் புதிய கட்டமைப்பின் அடிப்படையில் பொறுப்பாளர் நியமனம் நிறைவுறாத சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சீமான் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது,

Advertisement

"கூட்டத்தில் நிற்பவருக்கும் வீரம் தேவையில்லை. உயர்ந்த தந்துவம், தனித்துவத் தோடு நிற்கின்றோம். பெரியாரே ராமசாமி நாயக்கர் என்று தான் கையெழுத்து போட்டார். ஆந்திராவில் வெளியான படத்தில் கூட ராமசாமி நாயக்கர் என்று தான் பெயர் வைத்தார்கள். நீட்டு தனியார் பயிற்சியகத்தால் அவர்கள் தான் முதலாளியாகிறார்கள்.

இம்முறையும் தனித்தே தான் போட்டி. ஒவ்வொரு தொகுதியிலும் பணத்தை கொடுத்து வெற்றி பெற்றால் அவர்களிடம் சேவையென எதிர்பார்க்க முடியாது. எந்த உயிரினத்தையும் பற்றி கவலைப்படாத கூட்டம் தான் உள்ளது. தகப்பன் போல அன்பு வைத்திருந்த தலைவர் ராமதாஸ். அவருக்கு இவ்வளவு வருத்தம் இருக்கிறது என்பது அவர் பேசுகையில் தான் தெரிகிறது.

இது ஆறும் காயம். இருவரும் அருகருகே அமர்ந்து பேசி தீர்க்கும் சூழல் இல்லாததால் பொதுவெளியில் பேசுகின்றனர். ராமதாஸ் மனதில் இருந்ததை கொட்டி விட்டார். எனவே ஆறிவிடும். இவர்கள் சண்டையால் நாட்டு மக்களுக்கு என்ன இழப்பு. விலைவாசி ஏதும் ஏறி விட்டதா? இது சரியாகவேண்டிய பிரச்சனை தான் கீழடியில் முழுமையான ஆய்வை மேற்கொள்ளாமல் ஒப்புக்கு ஆய்வு செய்தனர்.

ஆனால் அந்த பொருட்களையும் பெங்களூருக்கு கொண்டு சென்று வைத்து விட்டனர். தமிழர்களுக்கு பெருமை தருவதை அவர்களால் ஏற்க முடியாது. தமிழை பெருமையாக பேசும் பிரதமர், நாடாளுமன்றத்தில் சமசுகிருதத்தில் ஏன் கல்வெட்டு வைத்தார்? தமிழுக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பை ஏன் திமுக எம்பிக்கள் கேள்வி கேட்கவில்லை. திராவிட குடும்பத்திற்குள் கன்னடம் இருக்கிறது என்றால் ஏன் தண்ணீர் கேட்டால் மறுக்கிறார்கள். கமல் பேசியதற்கு எதற்கு எதிர்க்கிறார்கள்? நீட் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.

மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல. நீட்டுக்கு எதிராக தமிழகம் மட்டுமே போராடுகிறது. நீட் பயிற்சி எனும் பெயரில் முதலாளிகள் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதற்கு தான் அது வழியமைத்துள்ளது விஜயை எதிர்த்து போட்டியிடுவதற்கா நான் கட்சி ஆரம்பித்து நடத்துகிறேன்? உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு தோல்விக்கு பிறகும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார். .

Tags :
Advertisement