வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் ரசாயன மருந்துகளை குறைக்க நடவடிக்கை!
ரசாயன உரங்கள் பயன்பாட்டினைக் குறைக்கும் வகையில், மண்வள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
இந்நிலையில் இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 20) காலை 10 மணிக்கு கூடியது. இந்த பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது,
'மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்' மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் இரசாயன மருந்துகளை குறைத்தல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இரசாயன உரங்கள் பயன்பாட்டினைக் குறைக்க மண்வள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை செய்யப்படும்" இவ்வாறு தெரிவித்தார்.