For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விமரிசையாக நடைபெற்ற மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய திருக்கல்யாண வைபவம்!

10:55 AM Nov 14, 2023 IST | Student Reporter
விமரிசையாக நடைபெற்ற மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய திருக்கல்யாண வைபவம்
Advertisement
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும்.  இங்குள்ள காவிரிக்கரையில் அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததால் சிவன் மயிலாக உருவம் கொண்டு பார்வதி தேவியுடன் சேர்ந்து மாயூரதாண்டவம் ஆடி மயில் உருநீங்கி சுயஉரு பெற்றாள் என்பது ஐதீகம்.

Advertisement

ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் காவிரியில் புனித நீராடி தங்களின் பாவங்களை போக்கி கொண்டதாகவும் புராணம் கூறுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி 1ம் தேதி முதல் மாயூரநாதர், வதான்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 7ம் திருநாளான நேற்று அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்று இரவு மயூரநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
மயூரநாதர்-அவையாம்பிகையுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

அதனைதொடர்ந்து ஊஞ்சள் உற்சவம் மாலை மாற்றுதல் நடைபெற்று பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர்.  சிவாச்சாரியார்கள், வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. பின்னர் பூர்ணாகுதி செய்யப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சோடச தீபாராதனை,  மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

ரூபி.காமராஜ்

Tags :
Advertisement