For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முழுக்கு விழா!

02:52 PM Nov 17, 2023 IST | Web Editor
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முழுக்கு விழா
Advertisement

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முடவன் முழுக்கு விழா நடைபெற்றது. 

Advertisement

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30
நாட்களும் நடைபெற்றது.  கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம்,  காவிரியில்
நீராடி இறைவனை வழிபட்டு தங்கள் பாவத்தை போக்கியதாக புராணம்.  அதன்படி
காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய  மாற்றுத்திறனாளி பக்தர் ஐப்பசி
மாதம் முடிவதற்குள் மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை.

இதையும் படியுங்கள்: ‘தளபதி விஜய் நூலகம்’ நாளை முதல் தொடங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!

அந்த பக்தருக்காக மனம் இறங்கிய இறைவன் அந்த பக்தருக்கு ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள் காவிரியில் நீராடிய பலனை அளித்தார்.  அதன்படி ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் நாள் முடவன் முழுக்கு என்ற பெயரில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.   இதனை
முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து மனோன்மணி உடனாகிய சந்திரசேகர சுவாமி காவிரி துலாக்கடத்திற்கு எழுந்தருளினார்.

அங்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.  தொடர்ந்து காவிரியில் பால், பன்னீர்,  சந்தனம் ஆகியவை ஊற்றி வழிபாடு நடைபெற்றது.  அதனை அடுத்து நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

Tags :
Advertisement