For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மருமகன் ஆகாஷ் ஆனந்தை அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் நீக்கினார் மாயாவதி!

ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் பகுஜன் சமாஜ் கட்சி நீக்கியுள்ளது.
07:12 PM Mar 02, 2025 IST | Web Editor
மருமகன் ஆகாஷ் ஆனந்தை அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் நீக்கினார் மாயாவதி
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்டுள்ளார். 30 வயதான ஆகாஷ் ஆனந்துக்கு பதிலாக ஆகாஷின் தந்தை ஆனந்த் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ராம்ஜி கவுதம் ஆகிய இரண்டு பேரையும் தேசிய ஒருங்கிணைப்பாளர்களை மாயாவதி நியமித்துள்ளார்.

Advertisement

ஆகாஷ் ஆனந்த் அனைத்து கட்சிப் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. லக்னோவில் மாயாவதி தலைமையில் நடைபெற்ற சமாஜ் கட்சி கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10, 2023 அன்று மாயாவதி ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பிறகு, கட்சித் தலைவர் மாயாவதி மீண்டும் ஆகாஷ் ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்தார்.

மே 7, 2024 அன்று, அத்தகைய முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு முதிர்ச்சியின் அவசியத்தைக் காரணம் காட்டி, 28 வயதான அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கினார். இந்நிலையில் தற்போது அவரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டார்.

Tags :
Advertisement