"நல்ல ஆரோக்கியமும், தொடர் வெற்றியும் கிடைக்கட்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து!
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திமுக-வினர் செய்து வருகின்றனர். வாழ்த்தரங்கம், கவியரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தார். தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிள்ளார்.
Wishing a very happy birthday to my brother and Tamil Nadu Chief Minister, Thiru @mkstalin.
We continue to stand together in our commitment to preserve India's rich diversity, federal structure, and Constitutional values.
May you have good health and continued success in…
— Rahul Gandhi (@RahulGandhi) March 1, 2025
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"எனது சகோதரரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்"
இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவிள்ளார்.