For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வெற்றிப் பயணம் என்றென்றும் தொய்வின்றி தொடரட்டும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

11:06 AM Oct 30, 2024 IST | Web Editor
“நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வெற்றிப் பயணம் என்றென்றும் தொய்வின்றி தொடரட்டும் ”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து
Advertisement

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வெற்றிப் பயணம் என்றென்றும் தொய்வின்றித் தொடரட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி தமிழ் ஊடக உலகில் முன்னணி ஊடகமாக வலம் வருகிறது. தமிழ் சமூகத்தில் செய்திகளை வழங்கும் பல தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் தனித்துவமான பல புதிய நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் வழங்கி வருகிறது.

வெறுமனே செய்திகளை வாசித்துவிட்டு கடந்து விடாமல் மக்களின் பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் விவாதித்து அதனை ஆளும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பல நல்ல தீர்வுகளை பெற்றுத் தந்துள்ளது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி.

நியூஸ் 7 தமிழின் தாரக மந்திரமான ”பொறுப்பும் பொதுநலனும்” என்பதற்கு ஏற்றவாறு பொறுப்புடனும் , பொது நல சிந்தனையோடு செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் ஊடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “பாலின சமத்துவ மாதமாக” அறிவித்து “நிகரென கொள்” எனும் நிகழ்ச்சியை நடத்தியது நியூஸ்7 தமிழ்.

நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம், அறச்சீற்றம், அன்புப் பாலம், வையத் தலைமை கொள், ஃபீனிக்ஸ் மனிதர்கள், நான்ஸ்டாப் 100 போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் உண்டு. தமிழ் ஊடக உலகில் பிரதான சேனலை தவிர்த்து விளையாட்டு, விவசாயம், பக்தி , உடல்நலம் என தனித்தனி சேனலை கொண்ட ஒரே தமிழ் ஊடகம் நியூஸ் 7 தமிழ் தான் மட்டும்தான்.

இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் 11-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நியூஸ் 7 தமிழின் 11-வது ஆண்டிற்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

24 மணிநேரச் செய்தி ஊடகங்களில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, தனது 11-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதறிந்து பெரிதும் மகிழ்கிறேன். செய்திகளை உடனுக்குடன் மட்டுமின்றி, செய்நேர்த்தியுடனும் வழங்கி வருவதன் மூலம், பார்வையாளர்கள் இடையே தனக்கானதொரு தனியிடத்தைப் பெற்று நிலைத்து நிற்கிறது. விறுவிறுப்பான செய்திகளையும், சூடான விவாதங்களையும் வழங்கிட ஒயாத உழைப்பை நல்கிடும் நிர்வாகிகள், செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வெற்றிப் பயணம் என்றென்றும் தொய்வின்றித் தொடர, எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

Tags :
Advertisement