"அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் தரட்டும்" - ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது ஈஸ்டர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார் என்று பைபிள் கூறுகிறது.
இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை தான் கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் கூறியிருபபதாவது,
"அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்! இந்த நன்னாளில், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நாம் கொண்டாடுகிறோம். இந்த பண்டிகை புதிய நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களை ஊக்குவிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைகள், மனிதர்களை அன்பும் தியாகமும் கொண்ட பாதையைப் பின்பற்ற ஊக்குவிக்கின்றன. இந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிரம்பிய பண்டிகை அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் தரட்டும்"
இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.