மே தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மே தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் உழைப்பாளர் தின உறுதிமொழியை ஏற்றனர்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசுகையில், "மே தினத்தில் அனைத்து உழைக்கும் மக்களையும் தோழர் என்று அழைக்க வேண்டும் என பெரியார் கூறினார். மே தினத்தன்று ஊதியத்தோடு கூடிய விடுமுறையை கொண்டு வந்தார். மே தினம் உருவாக்கிக் கொடுத்தவர் கருணாநிதி. நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் எத்தனையோ திட்டங்கள், எத்தனையோ சாதனைகளை நிறைவேற்றி வந்து கொண்டிருக்கிறோம்.
உருண்டோடுகின்ற ரயிலை ஓட்டக்கூடியவர் ஒரு தொழிலாளி தான். இழையை நூற்று நல்லாடையை நெய்பவரும் தொழிலாளி தான். இரும்பு காய்ச்சி உருக்குபவனும் தொழிலாளி தான். கடலில் மூழ்கி முத்து எடுப்பவனும் தொழிலாளி தான். உழுது நன்செய் பயிரிடுபவரும் தொழிலாளி தான். அந்த தொழிலாளர்களுடைய இனம் வகுந்து கொண்டாடக்கூடிய திருநாள் தான் மே தினம் என்று அறிஞர் அண்ணா சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். தொழிலாளர் தோழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தொழிலாளர்களுக்கு என்று செய்திருக்கக்கூடிய சாதனை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த நான்காண்டு காலத்தில் 28 லட்சத்துக்கும் மேலான அமைப்பு சாரா தொழிலாளருக்கு 2000. உலகம் அமைதியை பொதுவுடமை தத்துவத்தை அளித்த காரல் மார்க்ஸ் அவர்களின் சிலையை சென்னையில் அமைப்போம் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறோம், விரைவில் அமைக்கப்பட இருக்கிறது.
எந்த திட்டங்கள் அறிவித்தாலும் ஒப்புதல் எழுந்து விட்டாலும் நான் முதல் கேட்பது எவ்வளவு பேருக்கு வேலை தருவீர்கள் என்று தான். வேலை தரும் பணியாளர்களின் வருவாய் உயர்த்திக் கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது சாமானிய மக்களுக்கான சாமானிய ஆட்சி என்பது யாரும் மறக்க வேண்டாம். தொழிலாளர் தோழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.