Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அயோத்தி ராமர் கோயிலில் மொரீசியஸ் பிரதமர் வழிபாடு!

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் வழிபாடு நடத்தினார்.
02:53 PM Sep 12, 2025 IST | Web Editor
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் வழிபாடு நடத்தினார்.
Advertisement

மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 9ஆம் தேதி மும்பை வந்த அவர் நேற்று வாரணாசியில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது இரு தரப்பு உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

Advertisement

இதனை தொடர்ந்து இன்று மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அயோத்தி வந்த அவருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக அவர் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தந்திருந்தார். மேலும் ராம்கூலம் செப்டம்பர் 16 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
latestNewsmoriuspmramgoolamRamMandir
Advertisement
Next Article