இன்று மாட்டுப்பொங்கல் விழா | அலங்கார பொருட்கள் விற்பனை படு ஜோர்...!
06:51 AM Jan 16, 2024 IST | Web Editor
Advertisement
உழவர்களின் நண்பான கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மாட்டுப் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
Advertisement
நேற்று பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், தை மாதத்தின் இரண்டாம் நாளில், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொங்கல் படையலிட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. அத்துடன், கோயில்களில் உள்ள கோ சாலைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
இதனால், மாடுகளை அலங்கரிக்க சலங்கை, குப்பி, கொம்பில் அடிக்க பெயிண்ட், கழுத்தில் கட்ட கயிறு போன்ற பொருட்கள் சங்கராபுரம் கடைவீதியில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை சங்கராபுரத்தை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.