For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் சரிவு - சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பாராட்டு!

இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் சரிந்திருப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பாராட்டு தெரிவித்துள்ளார்.
11:27 AM Mar 01, 2025 IST | Web Editor
இந்தியாவில் தாய் சேய் இறப்பு விகிதம் சரிவு   சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டா பாராட்டு
Advertisement

ஒடிசாவின் புரி நகரில் சுகாதாரத்துறை சார்ந்த தேசிய மாநாடு ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசியவர்,

Advertisement

இந்தியாவில் பிரசவ கால தாய் மரண விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி உலகளாவிய சரிவை விட இரு மடங்கு அதிகமாகும். இது சுகாதார அமைப்பை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. இதைப்போல பிரசவ கால குழந்தை இறப்பு விகிதம் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை மரண விகிதமும் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்திருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகள் 30 நாட்களுக்குள் புற்றுநோய் சிகிச்சையை பெறுவதில் 90 சதவீதம் அதிகரிப்பைக் கண்டதாகவும், சிகிச்சையில் தாமதங்களைக் குறைப்பதாகவும், புற்றுநோய் நோயாளிகளின் நிதிச் சுமையைக் குறைப்பதாகவும் சமீபத்திய லான்செட் ஆய்வு கண்டறிந்துள்ளது.

இதைப்போல 2015-2023 கால கட்டத்தில் காச நோயாளிகள் எண்ணிக்கை 17.7 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. இதுவும் சர்வதேச சராசரியை (8.3 சதவீதம்) விட இரு மடங்கு அதிகம் ஆகும். கொரோனா தொற்று இருந்தபோதும் காசநோய் ஒழிப்பு இலக்கை இந்தியா கைவிடவில்லை. இதுபோன்ற எத்தகைய விழிப்புணர்வு பிரசாரங்களும் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெறாது. அந்தவகையில் சமூக சுகாதார ஆர்வலர்கள் மற்றும் பிற அடிமட்ட சுகாதார பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாய், மார்பகம் மற்றும் கருப்பை வாய் ஆகிய மூன்று வகையான புற்றுநோய்களுக்கான இலவச பரிசோதனையை வழங்கும் தேசிய சுகாதார திட்டத்தின் தொடர்ச்சியான பரிசோதனை இயக்கத்திற்கும் பாராட்டுகள். தொற்றாத நோய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை களைய வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டியது அவசியம்.

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பராமரிப்பு புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement