முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு!
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பான எம்டிஎஸ் ஆகியவற்றுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மார்ச் 3-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிந்தது. இந்த நிலையில் இந்த தேர்வு, ஜூலை 7-ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா!
மேற்கண்ட தேதிகள் முற்றிலும் தற்காலிகமானவை மற்றும் ஒப்புதல்கள் மற்றும் உறுதிப்படுத்தல்களுக்கு உட்பட்டவை என்பதால், தேர்வின் சரியான தேதி, தகவல்களை NBEMS இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தத் தேர்வுகளின் தகவல் அறிவிப்புகள், விண்ணப்பப் படிவங்கள் மற்றும் இந்தத் தேர்வுகளின் பிற விவரங்கள் அறிவிக்கப்பட்டவுடன் https://natboard.edu.in என்ற NBEMS இணையதளத்தை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.