Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து - லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!

ஹீத்ரோ விமான நிலையம், அருகே உள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, விமான நிலையம் மூடப்பட்டது.
01:41 PM Mar 21, 2025 IST | Web Editor
Advertisement

உலகத்தின் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுவது லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உலகின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலையத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் நேற்று இரவு 11.23 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Advertisement

இதன் காரணமாக விமான நிலையத்தில் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டது. இது குறித்து தகவலறிந்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி அங்கிருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து காரணமாக விமான நிலையத்துக்கும், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 16 ஆயிரம் வீடுகளுக்கும் மின்விநியோகம் செய்வது முற்றிலும் தடைப்பட்டது.

மேலும் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தொடர்ந்து பயணிகள் யாரும் வரவேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விமானம் புறப்படும் நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags :
AirportclosedfireaccidentHeathrow AirportLondonMassive firepower plant
Advertisement
Next Article