Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#JammuKashmirAssemblyElection 5-ஆவது முறையாக வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்!

07:50 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் யூசூப் தாரிகாமி, குல்காம் தொகுதியில் தொடர்ந்து 5-ஆவது முறையாக வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

Advertisement

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டியிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஆகிறார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் யூசூப் தாரிகாமி, குல்காம் தொகுதியில் தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 1996, 2002, 2008, 2014 தேர்தல்களில் வென்ற இவர் தற்போது நடந்த தேர்தலில் 7838 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

Tags :
Indiajammu kashmirJammu Kashmir Election ResultsJammu Kashmir ElectionsKulgamndanews7 tamilResults With News7 TamilTarigami
Advertisement
Next Article