For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சத்தீஸ்கர் : திருமணமாகாத நக்சலைட்டுகள் சரணடைந்தால் ரூ.1 லட்சம் நிதியுதவி!

10:10 PM Mar 23, 2025 IST | Web Editor
சத்தீஸ்கர்   திருமணமாகாத நக்சலைட்டுகள் சரணடைந்தால் ரூ 1 லட்சம் நிதியுதவி
Advertisement

சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நக்ஸல் அமைப்பினரின் தாக்குதலால் பாதிக்கப்படுவோருக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் இலவசமாக கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை, வேலைவாய்ப்புகள் வழங்க சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 'சத்தீஸ்கர் நக்ஸல் சரணடைதல்/பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சீரமைப்பு கொள்கை-2025'க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

நக்ஸல்களைக் கைது செய்ய உதவுவோர் மற்றும் அவர்களைப் பற்றிய துப்பு கொடுப்போர் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு தரப்பில் நிலம் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணத் தொகையும் அதிகரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நக்ஸல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரணடைந்தால் அவர்களுக்கு நிதியுதவியாக அரசு தரப்பிலிருந்து ரூ. 50,000 வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சரணடையும் நக்ஸல்கள் தங்களிடமுள்ள ஆயுதங்களை காவல் துறையிடம் ஒப்படைக்கும்போது, அதற்கான நிதியுதவியாக ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த திருமணமாகாதவர்கள் சரணடைந்தால், அவர்கள் திருமணம் செய்துகொள்ள நிதியுதவியாக சரணடைந்த 3 ஆண்டுகளுக்குள் ரூ. 1 லட்சம் வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நக்ஸல் அமைப்பினரைப் பற்றி துப்பு கொடுப்போர் நக்ஸல் தாக்குலில் கொல்லப்பட்டால், அவர்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

துப்பு கொடுப்போர் நக்ஸல் தாக்குலில் படுகாயமடைந்து நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நக்ஸல் தாக்குலில் பொதுமக்கள் கொல்லப்பட்டால், அவர்தம் குடும்பத்துக்கு ஒன்றரை ஹெக்டேர் நிலம் அல்லது நகர்ப்புற பகுதிகளில் 1,742 சதுர அடி வீட்டுமனை வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நக்ஸல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு திட்டங்களையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நக்ஸல் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் தனியார்துறை வேலையில் இணைந்தால் அவர்கள் பெறும் ஊதியத்தில் 40 சதவிகித தொகையை 5 ஆண்டுகளுக்கு அரசு வழங்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement