Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

துப்பாக்கி முனையில் திருமணம் - அரசு வேலையில் உள்ள இளைஞர்களுக்கு வலைவீச்சு.!

07:40 PM Dec 01, 2023 IST | Web Editor
Advertisement

பீகார் மாநிலத்தில் கடத்தி செல்லப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு துப்பாக்கி முனையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்படமானது மணமகனை கடத்தி திருமணம் நடத்தும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.  அப்படத்தில் நடைபெற்ற கட்டாயத் திருமணம் போன்றே பீகாரில் உண்மையாக மணமகனை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணத்தை முடித்துள்ளனர்.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த கௌதம் குமார் என்பவர் சமீபத்தில் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.  படேபூர் கிராமத்தின் ரெபுரா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணி நியமனம் வழங்கப்பட்ட அவரை,  கடந்த புதன்கிழமை (நவ.29) பள்ளி வளாகத்தில் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட கௌதம் குமாரை செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய், துப்பாக்கி முனையில் வைத்து  தனது மகள் சாந்தினிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அரசு வேளையில் உள்ள இளைஞரை கடத்தி சென்று திருமணம் நடத்திய நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தல்  சம்பவம் வெளியில் கசியத் தொடங்கியதும் கௌதம் குமாரை மீட்டுத் தருமாறு  அவரது குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் குமாரை கடத்தல்காரர்கள் தாக்கியதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இந்த வழக்கு தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் இது போன்ற கட்டாய திருமணங்கள் புதியதல்ல.  'பகத்வா விவாஹ்' எனப்படும் ’மணமகன் கடத்தல் கல்யாணம்’ என்பது பீகாரின் பின்தங்கிய மாவட்டங்களில் பரவலாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, பேகூசராய் பகுதியில் விலங்கிற்கு சிகிச்சை அளிக்க வந்த கால்நடை மருத்துவருக்கு  கட்டாய கல்யாணம் நடத்தி வைக்கப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags :
AbductionAtrangiReBiharfirForcedForcibleMarriagegovtschoolGovtTeacherIndiainvestigationMarriagemovieNews7Tamilnews7TamilUpdatesPoliceYoungters
Advertisement
Next Article