For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜப்பானியருடன் வாள் தயாரிக்கும் பயிற்சியில் மார்க் ஜக்கர்பர்க் - வீடியோ இணையத்தில் வைரல்

09:40 AM Feb 26, 2024 IST | Web Editor
ஜப்பானியருடன் வாள் தயாரிக்கும் பயிற்சியில் மார்க் ஜக்கர்பர்க்   வீடியோ இணையத்தில் வைரல்
Advertisement

ஜப்பானைச் சார்ந்த கலைஞருடன் வாள் தயாரிக்கும் பயிற்சியில் மார்க் ஜக்கர்பர்க் ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனரான மார்க் ஜக்கர்பர்க், பல்வேறு துறைகளில் தடம் பதித்து பல சாதனைகளையும் புரிந்துள்ளார். பேஸ்புக், வாட்சப் , இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் என பல சமூக வலைதளங்களை வெற்றிகரமாக உருவாக்கி அதன் மூலம் மிகப்பெரிய சந்தையை வைத்துள்ள மார்க் ஜக்கர்பர்க் தனது வாழ்வியல் அனுபவங்களை அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.

அந்தவகையில் சமீபத்தில் மாடு வளர்ப்பு தொழிலில் களமிறங்கிய மார்க் ஜக்கர்பர்க் அதனை வளர்ப்பதோடு அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தையும் தொடங்கினார்.  மாடுகளுக்கு சோளம், புற்கள் மற்றும் தீவணத்தைப் போட்டுப் பார்த்திருப்போம். ஆனால், மார்க் தனது நிறுவனத்தின் சிறந்த மாட்டு இறைச்சியை உருவாக்குவதற்காக தங்கள் பண்ணையில் உள்ள மாடுகளுக்கு உலர் கொட்டைகள், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீர் ஆகிவற்றை கொடுத்து வளர்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல வேலைப்பளுவுக்கு நடுவிலும் மார்க் ஜக்கர்பர்க் தனக்குப் பிடித்ததைச் செய்யத் தவறுதே இல்லை. கடந்த காலங்களில் அவர் ரன்னிங், தற்காப்புக் கலையான ஜூஜிட்சுவில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். மேலும் ஹவாயில் இருக்கும் கவாய் எனும் தீவில் பாதியை தனக்கு சொந்தமாக்கியுள்ள மார்க், அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பண்ணை ஒன்றை அமைத்து வருகிறார்.

இந்த நிலையில் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் ஜப்பானிய வாள் தயாரிப்பாளருடன் தான் இருக்கும் படத்தை மார்க் ஜக்கர்பர்க் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஒரு வீடியோவையும் அதில் பகிர்ந்துள்ளார். அதில் மார்க் ஜக்கர்பர்க் ஜப்பான் வாள் கலைஞருடன் சேர்ந்து தானும் வாளை தயாரித்துள்ளார். ஒரு இரும்பு ஆலையில் கடுமையான தீ பிளம்புகளுடையே பழுக்க காய்ச்சிய இரும்பை பெரிய சுத்தியலால் அடித்து வாளை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.



இந்த வீடியோவை பகிர்ந்து அவர் தெரிவித்துள்ளதாவது..

“ வாள் தாயாரிக்கும் கலைஞர்  அகிஹிரா கோகாஜியுடன் வாள்களை தயாரிப்பதைப் பற்றி கற்றுக் கொண்ட  மிகவும் சிறப்பு வாய்ந்த மதிய நேரம் அமைந்தது. உங்கள் கலையை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement