கிட்டார் வாசிக்கும் வீடியோவை AI தொழில்நுட்பம் கொண்டு தயார் செய்த மார்க் ஜக்கர்பெர்க்!
மெட்டா நிறுவனத்தின் புதிய செயலியான V-JEPA கொண்டு, கிட்டார் வாசிப்பது போல தயார் செய்யப்பட்ட வீடியோவை மார்க் ஜக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் தனது பழைய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அதில் அவர் தனது மகள் மாக்சிமாவுக்காக கிட்டார் இசைத்துக்கொண்டு ஒரு பாடலைப் பாடுவதை காணலாம். ஆனால், V-JEPA எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியில் இந்த வீடியோவை சோதித்ததாகவும், அதற்கான முடிவுகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் ஜூக்கர்பெர்க் தெரிவித்தார்.
அந்த வீடியோவில், ஜூக்கர்பெர்க் டெய்லர் ஸ்விஃப்ட் பாடிய “ஹவ் யூ கெட் தி கேர்ள்” பாடலை கிட்டாரில் வாசிப்பதைக் காணலாம். அதன் தொடர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களில், V-JEPA செயற்கை நுண்ணறிவு, வீடியோக்களை பகுப்பாய்வு செய்ய எவ்வாறு பயிற்சி பெற்றது என்பதை நிரூபிக்கும்படி அவர் பதிவிட்டுள்ளார்.
V-JEPA செயலியானது, அதிக எண்ணிக்கையிலான வீடியோக்களைப் பார்த்து பல விசயங்களை கற்றுக்கொள்கிறது. பின்னர் ஒரு சிறப்பு முறையைப் பயன்படுத்தி, அந்த வீடியோக்களில் என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முயற்சிக்கிறது. எடுத்துக்காட்டாக, வீடியோவின் ஒரு பகுதியில், ஜுக்கர்பெர்க் கிட்டார் இசைக்காமல் இருக்கிறார். ஆனால், V-JEPA செயலி, கிட்டார் வாசிப்பவர்களின் மற்ற வீடியோக்களில் இருந்து கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் அவர் கிட்டார் வாசிக்கும் வகையில் வீடியோவை தயார் செய்துள்ளது.
இந்த V-JEPA செயலி, வீடியோவை மிகவும் கவனமான முறையில் பின்பற்றுவதால், அதன்மூலம் பொய் செய்திகளை புறக்கணிக்க முடியும் என நம்பப்படுவதாக கூறப்படுகிறது.