கேரளாவில் தண்டர்போல்ட் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு; 2 மாவோயிஸ்டுகள் கைது
10:55 AM Nov 08, 2023 IST | Web Editor
Advertisement
கேரளாவில் தண்டர்போல்ட் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 மாவோயிஸ்டுகள் கைது செய்தனர்.
Advertisement
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள தலபுழா பகுதியில் நேற்று இரவு கேரள மாநில சிறப்பு போலீஸ் படையினரும், தண்டர்போல்ட் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது 5 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலின் போது உண்ணி மாயா மற்றும் சந்துரு ஆகிய 2 மாவோயிஸ்டுகளை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தப்பியோடிய மேலும் 3 பேரை தேடும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.