"என்னுடைய அழகான பயணத்தைப் பகிரும் ஒரு வழிமுறையாகும்" - கிண்டல்களுக்குப் பதிலளித்த #ManuPakkar
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கல பதக்கங்களை வென்ற வீராங்கனை மனு பாக்கர் தன் மீதான் கிண்டல்களுக்கு பதிலளித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தூப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் தனிநபர் 10 மீ. ஏர் பிஸ்டல், கலப்பு அணிகள் பிரிவில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
மேலும், மகளிர் 25 மீ. ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை மனு பாக்கர் தவறவிட்டார். இதையடுத்து, அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்களை என அனைவரும் இவரை வாழ்த்தினர். குறிப்பாக, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை நேரில் சென்று பார்த்து மனு பாக்கர் வாழ்த்து பெற்றார்.
இதையும் படியுங்கள் : MUDA நில முறைகேடு விவகாரம் | “விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை!” – சித்தராமையா பதிவு!
இந்நிலையில், விருது வென்ற மனு பாக்கர் இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னையிலும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சமூக வலைதளங்களில் மனு பாக்கரை சிலர் கிண்டல் செய்து வந்தனர். எங்கு சென்றாலும் இந்தப் பதக்கங்களுடன் செல்வதா என சிலர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதற்கு பதிலடியாக தனது எக்ஸ் பக்கத்தில் மனு பாக்கர் கூறியதாவது:
" 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் நான் வென்ற இரண்டு வெண்கல பதக்கங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது. எப்போதெல்லாம் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்து, பதக்கங்களைக் காண்பிக்க சொல்கிறார்களோ அப்போதெல்லாம் நான் மிகவும் பெருமையுடன் காண்பிப்பேன். இது என்னுடைய அழகான பயணத்தைப் பகிரும் ஒரு வழிமுறையாகும்"
இவ்வாறு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.