Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸ் கட்சியில் இணைய மன்சூர் அலிகான் கடிதம் - செல்வப்பெருந்தகை அளித்த விளக்கம் என்ன?

01:15 PM Apr 25, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் கடிதம் அளித்துள்ளார்.

Advertisement

இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப். 19-ம் தேதி தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப். 19-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மக்கள் உற்சாகமாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

இந்நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் கடிதம் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  மன்சூர் அலிகான்,

“பிரதமரை கைது செய்து திகார் சிறையில் அடைத்த பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். இதன்மூலம் தனது 'இந்திய ஜனநாயக புலிகள்' கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர்” என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

ஆனால், தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது எனவும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மன்சூர் அலிகான் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tags :
CongressElections With News7TamilElections2024IJPLoksabha Elections 2024Mansoor AliKhanNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article