இறுதி சடங்கிற்காக பாரதிராஜாவின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது மனோஜின் உடல்!
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார். இந்நிலையில் மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25) அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காலமான மனோஜின் உடல் கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்திற்கு இறுதி சடங்கிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. மனோஜின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார்.