For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விடைபெற்ற மனோஜ் பாரதி, ஷிஹான் ஹூசைனி - சோகத்தில் தமிழ்த் திரையுலகம்!

மனோஜ் பாரதி, ஷிஹான் ஹூசைனி ஆகிய திரைப்பிரபலங்களின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
06:06 PM Mar 26, 2025 IST | Web Editor
விடைபெற்ற மனோஜ் பாரதி  ஷிஹான் ஹூசைனி   சோகத்தில் தமிழ்த் திரையுலகம்
Advertisement

மதுரையைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரருமான ஷிஹான் ஹூசைனி(வயது60), தமிழ் சினிமாவில் கே. பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் விஜய்யின் பத்ரி படத்தில் நடித்து பலரின் கவனத்தை  ஈர்த்தார். இவர்  400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்து வந்தார்.

Advertisement

அண்மையில் ரத்த புற்றுநோய் பாதிப்பால் தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஊடகங்களின் வாயிலாக அவர் தெரிவித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த சூழலில்  அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(மார்ச்.25) நள்ளிரவு காலமானார். இவரது மறைவிற்கு திரைப்பிரலங்கல் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இதனிடையே  இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி(வயது 48 ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில்,நேற்றிரவு திடீரென மாரடைப்பு காரணாம்மாக காலமானார். இவர் தனது தந்தை இயக்கிய தாஜ் மஹால் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, கடந்த 2023ஆம் ஆண்டு தந்தையை வைத்து மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

மனோஜ் பாரதியின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட நிலையில் அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதே போல்  ஷிஹான் ஹூசைனி உடல் அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காஜிமார் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மனோஜ் பாரதியின் உடல் மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஷிஹான் ஹூசைனி உடல் காஜிமார் தெரு பகுதியில் உள்ள அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இருவரது மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
Advertisement